
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையிலும் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


