
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 25ல் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
ஏப்.,19ல் தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 25ம் தேதி மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


