Arvind Kejriwal Arrest: டவர் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது!

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரிலிருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்குக் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும்எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.  சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் டில்லி முதல்வரைக் கைதைக் கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியில உள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள செல்போன் டவர் மீது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *