மதவெறியை மாய்ப்போம் மகாத்மாவைப் போற்றுவோம் – ஸ்டாலின் கருத்து.!

மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி மதவெறியை மாய்ப்போம் மகாத்மாவைப் போற்றுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *