புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு.!

Advertisements

கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நேர்ந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் மற்றும் பெயர் குறிப்பிடாத நிர்வாகிகள் மீது நியாயச் சட்டத்தின் நான்கு பிரிவுகளிலும், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பேருந்தின் மீது ஏறி நின்றபடி சாலைகளில் வீதியுலாவாகச் சென்று பரப்புரை மேற்கொண்ட விஜய் மீது வழக்குப் பதியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *