Lok Sabha Elections 2024: மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.. தமிழிசை கோரிக்கை!

Advertisements

தென் சென்னைக்குட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்தார்.

சென்னை: தென்சென்னை தேர்தல் அலுவரிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு அளித்தார். அதில், தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்டுகளைத் தாக்கிவிட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தென் சென்னைக்குட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

* பூத் ஏஜெண்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.

* வாக்காளர் பட்டியலில் குளறுபடி தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்.

* வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம்.

* தேர்தலுக்காகக் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை.

* பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது.

* வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான்.

* வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைக் களைந்தாலே 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *