Malavika Mohanan:”வயசு 31 ஆகப்போகுது.. அதுக்கு ..” ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனன் நச் ரிப்ளை!

Actress Malavika Mohanan : பிரபல நடிகை மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேரளாவின் பையனூரில் பிறந்த நடிகை மாளவிகா மோகனன், வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி தனது 31வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். அது மட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” திரைப்படம் வெளியாக உள்ளது.

அதே போல நடிகை மாளவிகா, அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் #AskMalavika என்ற தலைப்பில் தனது ரசிகர்களோடு கலந்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல நெட்டிசன்கள் சர்ச்சையான சில கேள்விகளைக் கேட்க, அதற்குப் போல்டாகப் பதில் அளித்துக் கெத்து காட்டியவர் தான் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் நேற்று மாளவிகா மீண்டும் தனது ரசிகர்களோடு கலந்துரையாடிய நிலையில், நெட்டிசன் ஒருவர் நடிகைகளிடம் இயல்பாகக் கேட்கப்படும் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார், அதுதான் “மாளவிகா உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டது, எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்” என்ற கேள்வி. அதற்குப் பதில் அளித்த அவர் “என்னை மனக்கோளத்தில் பார்க்க உங்களுக்கு அப்படி என்ன அவசரம்” என்று பதில் அளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்த மோகனன் என்பவருடைய மகள் தான் மாளவிகா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட” திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தைக் கோலிவுட் உலகில் துவங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *