
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்.சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-
* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதை உறுதி செய்யப்படும்.
* அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மாநில தன்னாட்சி அதிகாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
* தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
* 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.
* காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்.
* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
* என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.
* மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.
* ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.


