
கேரளத்தில் இரண்டாம் கட்டமாக வடபகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரளத்தின் தென்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் நாள் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக வடபகுதியில் உள்ள திருச்சூர், பாலக்காடு, மலைப்புறம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
மக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தின் இடைக்கடவு சேரிக்கல் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
திருச்சூர் மாவட்டம் அந்திக்காடு நடுநிலைப் பள்ளியில் வருவாய்துறை அமைச்சர் ராஜன் வாக்குப்பதிவு செய்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாமா முகமது கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நண்பகல் 12 மணி நிலவரப்படி 35 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.


