இன்று திரிவேணி சங்கமத்தில் நீராடும் பிரதமர் மோடி!

Advertisements

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது.

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் புனித நீராடி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் செல்கிறார்.

அங்குப் படகுமூலம் ஏரியல் கோட் பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.

தலைநகர் டெல்லியில்சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *