‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மத்திய அரசின் முதன்மையான நோக்கம் – திரவுபதி முர்மு!

Advertisements

2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளான இன்று பாராளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.

பாராளுமன்றம் வந்தடைந்த குடியரசுத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

செங்கோல் முன்னதாகக் கொண்டு செல்லப்பட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குடியரசு தலைவரைக் குடியரசு துணை தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் வரவேற்றனர்.

இதையடுத்து இந்தாண்டிற்கான பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் கூறியது,

* சில தினங்களுக்கு முன்பு நாட்டில் 76-வது குடியரசுத் தினத்தை நிறைவு செய்தோம்.

* இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

* மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

* புதிய திட்டங்கள் அதிவேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

* 3 கோடி குடும்பங்களின் இலவச வீட்டுக்கனவு நனவாகி உள்ளது.

* லட்சக்கணக்காக மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* மத்திய அரசு மும்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

* நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுப்பதாக மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

* 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

* 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது.

* விவசாயிகள், பெண்கள் நலன் கருதி மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

* பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வங்கிக்கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

* 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம்.

* வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *