வாழ்க்கையில் அடிபட்டு ஜெயிச்சவன் தான் அதிகம் – நடிகர் சூரி கருத்து.!

Advertisements

ஆசைப்பட்டு ஜெயிச்சவனை விட, வாழ்க்கையில் அடிபட்டு ஜெயிச்சவன் தான் இங்கு பல பேர் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கல்லூரியின் சார்பில் மாபெரும் இளைஞர் தொழில்முனைவோர் வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தனியார் நகை கடையின் நிர்வாக இயக்குநர்கள் அனந்தபத்மநாபன், ரமேஷ், திரைப்பட நடிகர் சூரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், தனியார் கல்லூரியின் சேர்மன் முத்துராமலிங்கம் பேசியபோது, பட்டம் பெற்றவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனும் நோக்கத்தில் இணைப்பு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூரி மாணவர்களிடையே பேசியபோது, ஆசைப்பட்டு ஜெயிச்சவனை விட, வாழ்க்கையில் அடிபட்டு ஜெயிச்சவன் தான் இங்கு பல பேர் என்றும் அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை கடவுள் நிச்சயமாக தூக்கி விடாமல் இருக்க மாட்டார் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *