
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதில், அதிகப்பட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய விராட்கோலி 75 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்முலம், பெங்களூரு அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


