விஜயகாந்த் நினைவுநாள் – அரசியல் தலைவர்கள் , பொதுமக்கள் அஞ்சலி.!

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவுநாளையொட்டிச் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழிசை, கரு நாகராஜன் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த விஜயகாந்த் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *