கூட்டணிக்கு வழி இல்லை : திண்டாடும் பிரேமலதா : முடிவு என்ன?

Advertisements
நமது கேப்டன் தொடங்கிய தேமுதிக தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி. நமது கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. கூட்டணி தொடர்பாக பேசி வருகிறேன் ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தார் .
தற்பொழுது அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாமல் மிகப்பெரிய திண்டாட்டத்தில் இருக்கிறார். அதிமுக பாஜக தவெக என பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து மாதக்கணக்கில் பேசி வந்த பிரேமலதா தற்போது எந்தப் பக்கமும் பல்டி அடிக்க முடியாமல் திணறும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் .
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தமிழக மக்களால் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட  விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி ஒரு காலகட்டத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று மிகப் பலமான கட்சியாக விளங்கியது
இதன் பின்னர் ஏராளமான தோல்விகளை கண்ட நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவை அடுத்து தற்பொழுது அந்த கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அனுதாப அலை வீசுகிறது . இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வந்தார் .
தேமுதிகவை பொருத்த வரையில் தனித்துப் போட்டியிட முடியாத சூழ்நிலையில் இருப்பதால் ஏதாவது கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த தேர்தலின் போது தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லி அதிமுக ஏமாற்றிவிட்டது என குற்றம் சாட்டிய நிலையில் தமிழக வெற்றி கழகம் பக்கம் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார் .
அந்த பேச்சுவார்த்தையின் போது தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் மேலும் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசியதாக தெரிகிறது.  இதற்கு தமிழக வெற்றி கழகம் உடன்பாடு தெரிவிக்காததால் சில நாட்கள் அமைதியாக இருந்த பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக தரப்பில் இருந்து அழைத்து பேசினர் .
அப்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக ராஜ்யசபா சீட்டு ஒதுக்கி தருவதாக வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் அதே சமயம் தேர்தல் செலவை தேமுதிக தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசி முடிக்கப்பட்டது . ஆனால் இதற்கு பிரேமலதா விஜயகாந்த் ஒத்துக் கொள்ளவில்லை.  இந்த நிலையில் டெல்லி பாஜக மேல் இடம் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டுமென விரும்பியது .
இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக மேல் இடம் பிரேமலதா விஜயகாந்த் துக்கு தூது விட்டு பேசியது . அப்போது தனக்கு 15 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் மேலும் தலா ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வரை செலவாகிறது. எனவே அதனையும் கூட்டணி கட்சி தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கைகள் வைத்தார்.
டெல்லி பாஜக மேல் இடம் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியிடமும் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது . எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரையில் இது பாஜக விவகாரம் நீங்களே பேசி முடித்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் கடைசி கட்ட பேச்சுவார்த்தையும் பேசி முடிக்கப்பட்டது . இந்த நிலையில் தான் தற்பொழுது அடுத்த கட்ட திருப்ப நிகழ்வு ஒன்று தேமுதிகவில் நடைபெற்று இருக்கிறது . தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் சென்னை வந்தபோது ஒரு நட்சத்திர ஓட்டலில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
அப்பொழுது தேமுதிக பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றது . இந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது தேமுதிகவிற்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கி தரலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் சேரும் அடுத்தகட்ட நிகழ்வும் அரங்கேறியது .
ஆனால் தற்பொழுது அதிமுக தரப்பில் ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை . தேர்தல் செலவு தொகை தவிர கண்டிப்பாக பதினைந்து தொகுதிகள் வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் அடம்பிடித்து வருவதாக தெரிகிறது .
அந்த வகையில் 15 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்கி தர முடியாது என அதிமுக வட்டாரத்தில் இருந்து முடிவு எடுத்திருக்கிறார்கள் . எனவே தற்பொழுது எந்த கூட்டணியுடன் சேர்வது என்பதில் தேமுதிக மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது . எனவே மீண்டும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா என பிரேமலதா விஜயகாந்த் யோசனை செய்து வருகிறார் .
தேர்தல் செலவுக்கும் பணம் வேண்டும் கூடுதலாக தொகுதியும் ஒதுக்கி தர வேண்டும் . ராஜ்யசபா சீட்டும் தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் ஏராளமான கண்டிஷன்கள் போடுவதால் எந்த கட்சியும் அவரைக் கூட்டணியில் சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *