தேநீர்க் கடைகளுக்கு 500 முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வரி வசூல்..!

Advertisements

ஊராட்சிகளில் உள்ள தேநீர்க் கடைகளுக்கும் சிற்றுண்டிக் கடைகளுக்கும் 500 ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை உரிமக் கட்டணம் நிர்ணயித்திருப்பதற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஊர்ப்புறங்களில் இயங்கிவரும் தேநீர்க் கடைகளின் மாத வருமானம் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும் என்றும், அதில் பெரும்பங்கை உரிமக் கட்டணம் என்ற பெயரில் பறிப்பது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்று குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர்க் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு எனத் தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூடத் திமுக அரசு முடிவு செய்துவிட்டதா? என்று வினவியுள்ளார்.

இந்த உரிமக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *