Salem: 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்.. கடையடைப்பு!

Advertisements

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அருகில் சேலம் – விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் ரயில்வே கேட் அகற்றி சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலமாக அமைத்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆத்தூரில் 300க்கும் மேற்பட்ட ஏழு கிராம மக்கள்ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்,இதற்க்கு  வணிகர்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்தேன்.

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி, வடசென்னிமலை முருகன் கோவில் அருகில் உள்ள சேலம் – விருதாச்சலம் அகல ரயில் பாதையில் ரயில்வே கேட் அகற்றி சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மேம்பாலமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் ஏற்கனவே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்த நிலையில் இன்று சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலமாக அமைத்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஏழு கிராம மக்கள் திரண்டு 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் அமையப்போகும் சுரங்கப்பாதையால், காட்டுக்கோட்டை, வடசென்னிமலை, சார்வாய்புதூர், சதாசிவபுரம் சாத்தப்பாடி, ஒதியத்தூர், வளையமாதேவி ஆகிய கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் ஆத்தூர் பெரம்பலூர் மாவட்ட இணைப்புச்சாலையாக இருந்து வருவதால் அமையப்போகும் சுரங்கப்பாதியாள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் ஏற்கனவே ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருவதால் வாகனங்கள் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும்,

வடசென்னிமலை முருகன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சுரங்கப்பாதை அமைத்தால் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படும் எனவும் ஏற்கனவே செயல்படும் சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவழியாகச் செல்லும் பேருந்துகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் ரயில்வே சுரங்கப்பாதையில் வேளாண் விலைப் பொருட்களான கரும்பு, மஞ்சள், பருத்தி, மரவள்ளி கிழங்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் நெல் அறுவடை இயந்திரம், ரிக் வண்டி ஆகிய கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் இதனால் மத்திய, மாநில அரசுகள் சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்,

மேலும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காட்டுக்கோட்டை முதல் வடசென்னிமலை வரை, 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,அதை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கைவிடவில்லை எனில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *