
பெற்றவர்களின் வயிறு எரிய வைத்தவர்கள் யாரும் வாழ்ந்தது கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி பரணிபுத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமைத் தொடக்கி வைத்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன், ராமதாசின் மனம் நோகுமளவுக்கு அவர் மகன் அன்புமணி நடந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்பாவை நம்பாமல் ஒட்டுக் கேட்கும் கருவிவை அன்புமணி வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அப்பா வயிறு எரிய வைத்தவர்கள் யாரும் வாழ்ந்தது கிடையாது எனத் தெரிவித்தார்.



