
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுவதாகவும், சாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அருகே கவின்குமார் என்ற மென்பொறியாளர் மாற்றுச்சாதிப் பெண்ணைக் காததித்ததற்காக கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், தமிழகக் காவல்துறை ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறித் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.



