LED TV , வாஷிங் மெஷின், சில்வர் பாத்திரங்கள் – திமுக VS அதிமுக தேர்தல் பரிசு.!

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெண்களை குறி வைத்து திமுகவும் அதிமுகவும் மிகப்பெரிய பரிசுமழை பொழிய காத்திருக்கிறது . குறிப்பாக திமுக தரப்பில் ஒரு குடும்பத்திற்கு எல்இடி டிவியும் அதிமுக தரப்பில் ஒரு குடும்பத்துக்கு வாஷிங் மெஷினும் தரப்படுகிறது . எனவே உங்கள் ஓட்டு எல் இ டி டிவிக் கா அல்லது வாஷிங்மெஷினுக்கா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தால் வீட்டுக்கு ஒரு கார் என வாக்குறுதி அளித்திருக்கிறார்.
எனவே யாருக்கு என்ன தேவை இருக்கிறதோ அந்த தேவையை பொறுத்து நீங்கள் வாக்களிக்கலாம் இது மட்டுமல்லாமல் அண்டா முதல் குண்டாவரை ஏராளமான எவர்சில்வர் பாத்திரங்களும் உங்கள் வீட்டுக்கு வர காத்திருக்கிறது .
வருகிற சட்டமன்றத் தேர்தலில், திமுக அதிமுக தவெக ஆகிய  கட்சிகள் தரப்பில் ஏராளமான பரிசுப் பொருட்கள் தருவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது . திமுகவை பொறுத்த வரையில் இலவச பொருட்கள் வழங்குவதில் மெகா திட்டம் வகுத்து வைத்திருக்கிறார்கள் .
ஏற்கனவே , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இலவச தொலைக்காட்சி வழங்கியதன் மூலம் பெருவாரியான வாக்குகளை பெற முடிந்தது .
அந்த வகையில் தற்பொழுது ஒரு குடும்பத்துக்கு ஒரு எல் இ டி டிவி வழங்க ஏற்பாடு ஆகி வருகிறது இந்த டிவி யின் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் . இது தவிர மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடை பெற்று வருகின்றன .
இது தவிர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொந்தச் செலவில் தொகுதி மக்களுக்கு பணமுடிப்பு தருவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது . அந்த வகையில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 2500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கிடைக்கலாம் .
இதே வேளையில் அதிமுக தரப்பிலும் மிகப்பெரிய பரிசு மழை பொழிய காத்திருக்கிறது . ஏற்கனவே திமுக தரப்பில் எல்இடி தொலைக்காட்சி தர திட்டமிட்ட தகவல் கசிந்ததால் தற்பொழுது அதிமுக தரப்பில் வீட்டுக்கு வீடு துணி துவைக்கும் வாஷிங் மெஷின் எந்திரம் தருவதற்கு ஏற்பாடு ஆகி வருகிறது. இந்த எந்திரத்தின் விலை 7000 ரூபாய் ஆகும் .
இது மட்டுமல்லாமல் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பண முடிப்பு தருவதுடன் வீட்டுக்கு வீடு சில்வர் பாத்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.  எனவே அதிமுகவுக்கு வாக்களித்தால் உங்களுக்கு வாஷிங் மெஷின் பண முடிப்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் கிடைக்கலாம் .
இதனிடையே அதிமுக தரப்பிலும் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் இரண்டு கோடியே எழுபது லட்சம் பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்களது வாக்கு வங்கியை பெறுவதற்காக திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு பரிசுகளை அள்ளித்தர காத்திருக்கின்றன.
இதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியும் புதுவிதமான திட்டத்தில் களமிறங்குகிறது கடந்த பீகார் சட்டசபை தேர்தலின்போது தொழில் தொடங்குவதற்காக 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து அவர்களது வங்கி கணக்கில் தலா ஒரு லட்சம் ரூபாய் வரவு வைப்பு நிதியாக அறிவித்தது
அதேபோல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்களித்தால் நீங்கள் தொழில் தொடங்கும் வகையில் ஒரு வங்கி கணக்குக்கு 75 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் வகையில்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது . இதேபோல் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தால் வீட்டுக்கு வீடு ஒரு மோட்டார் சைக்கிள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இது மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சி அடைந்தால் வீட்டுக்கு ஒரு கார் என நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார் .
இதோடு நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான ஏர் கலப்பை உள்பட இடுபொருட்கள் மற்றும் உரங்கள் இலவசமாக தரப்படும் என சில அறிவிப்புகள் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியே கசிந்து இருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயிகளை மையமாக வைத்து அவர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்றும் திரை மறைவில் பேசப்படுகிறது.
எனவே வருகிற தேர்தலில்  பரிசு மழை அதிரடியாக இருக்கும் என தெரிகிறது . ஆனால் அதே வேளையில் அளவுக்கு மீறிய இத்தகைய அறிவிப்புகள் நடைமுறையில் சாத்தியமா என்று கேள்வி கேட்டால் இதற்கு வாய்ப்பில்லை ராஜா என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *