விஜய்யை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை – எடப்பாடி பேச்சு.!

தவெக திமுக இடையேதான் போட்டி என விஜய் கூறுவதை தாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஆட்சியில் பங்கு இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது, திமுகவுக்கும் உள்ள பிரச்சனை என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் கூறினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்டையான இடங்களில் போட்டியிட்டு வெற்றிப்பெறும் என்றார். தவெக இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை என்றும் தேர்தலை சந்தித்த பின்னரே அரசியலில் அவர் எப்படி என்பது என தெரியும் என்றும் கூறினார்.

தவெக திமுக இடையேதான் போட்டி என விஜய் கூறுவதை தாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *