கேரள மந்திரவாதியை சந்திக்கும் எடப்பாடி: யாருக்கு வெற்றி என முடிவு.!

Advertisements
முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா தனது அதிமுக கட்சியை வழிநடத்தும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செய்வதும் தனக்கென பிரத்தியேகமாக நல்ல தகவல்களை சொல்லும் ஜோதிடர்களை கலந்தாலோசிப்பதும் அவரது வழக்கமாக இருந்தது.
இது மட்டுமல்லாமல் கேரள கோவில்களுக்கு சென்று சிறப்பு பரிகாரங்கள் செய்வதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் . தற்பொழுது,  அவர் தேர்தல் முடிவு தொடர்பாக வெகு விரைவிலேயே கேரளத்தில் உள்ள பிரபலமான மந்திரவாதி ஒருவரை சந்திக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக இடையே மிக பலமான போட்டி நிலவுகிறது இரு கட்சிகளுக்கும் வருகிற சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான முடிவை சொல்ல காத்திருக்கிறது . அந்த வகையில் எப்படியாவது மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான போராட்டங்களை சந்தித்து வருகிறார் .
எதிர்க்கட்சி போட்டி.. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு… வேட்பாளர் தேர்வு என மிகப் பெரிய தலைவலிகளை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரையில் அவ்வப்போது ஜோதிடர்களை கலந்தாலோசிப்பது அவரது வழக்கமாக இருக்கிறது .
ஏற்கனவே , ஆறு மாதங்களுக்கு முன்பாக பிரபல ஜோதிடர் ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து அவர் ஆருடம் கணித்தார்.  அப்பொழுது அந்த ஜோதிடர் நீங்கள் எந்த வகையிலும் கவலைப்பட வேண்டாம் . உங்களுக்கு வெற்றி தரக்கூடிய கூட்டணிகள் அமையும் நிச்சயமாக இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் .
இதனிடையே , கடந்த மாதமும் வேறு ஒரு ஜோதிடரை வீட்டுக்கு அழைத்து ஆருடம் கணித்து இருக்கிறார்.  அவரும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது . நம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுங்கள் அனைத்து வகையான குழப்பங்களும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்பாக நீங்கிவிடும் நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்பதில் உறுதியான தகவல்களை சொல்லி இருக்கிறார் .
இதனிடையே மற்றொரு ஜோதிடர் மிக துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.  நீங்கள் இந்த தேர்தலில் மிக பலமான போட்டியை சந்திக்க வேண்டியது இருக்கும். கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக உங்களுடைய ஜாதக பலன்கள் சரியாக அமையவில்லை எனவே வெற்றி என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று பகிரங்கமாக தெரிவித்துவிட்டார் .
இந்த நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி மிகவும் குழப்பமான சூழ்நிலைக்கு வந்ததாக தெரிகிறது . ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரளாவில் உள்ள ஒரு பிரபலமான மந்திரவாதிகளுடன் தொடர்புண்டு அந்த மந்திரவாதியை தனக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து பேசுவது அவரது வழக்கமாக இருந்து வருகிறது என்பது திரை மறைவு செய்தியாகும் .
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட அவர் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட யாருமில்லாமல் ஐந்து நாட்கள் கேரளாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார் . அங்கு பிரபல மந்திரவாதியை சந்தித்து சில ஆலோசனைகள் நடத்தியதாகவும் யாகங்கள் வளர்த்ததாகவும் தகவல்கள் வெளி வந்தன.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் நேரடியாகவே நிருபர்கள் கேள்வி கேட்டபோது நான் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றேன். பெரும்பாலான இடங்களில் நான் நின்று கொண்டே பேசுவதால் எனது உள்ளங்கால்களில் வலி இருக்கிறது.  இது தொடர்பாக ஆயுர்வேத சிகிச்சைக்கு நான் சென்றேன் . எனவே ஐந்து நாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது .
இதனை நான் பட்டிமன்றம் போட்டு வெளியே சொல்லிவிட்டா செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்பொழுது இந்த மாத இறுதி வாக்கில் மீண்டும் அந்த மந்திரவாதியை சந்தித்து தேவையான தகவல்களை  பெறவும் பரிகாரங்கள் செய்யவும் திரை மறைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது .
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவாரா அல்லது அதிமுக தேர்தல் களத்தில் என்ன நடைபெறும் என்பதை அந்த மந்திரவாதி சில மந்திரங்களை ஓதி ஆவிகளை அழைத்து பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *