TTV : தினகரன் காலாவதியான அரசியல்வாதி!

தினகரன் காலாவதியான அரசியல்வாதியாக உள்ளார், அவரைப் பற்றிப் பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை 58ஆம் கால்வாயில் திறக்கக் கோரி முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுதும் மழை பெய்தாலும் உசிலம்பட்டி பகுதி வறட்சியாக உள்ளதாகவும், அதனால் வைகை அணையிலிருந்து 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தாலர்.
தினகரன் குறித்துப் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதாகவும், மீடியா வெளிச்சத்துக்காகத் தினகரன் எடப்பாடி குறித்து விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார். தினகரன் காலாவதியான அரசியல்வாதி என்றும், அவரைப் பற்றிப் பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம் என்றும் உதயகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *