தனியார் தொலைக்காட்சிமூலம் பிரபலமான பாலா அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கள் இலவசமாகப் பயணிக்க ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளார். ஆட்டோவிற்கான செலவு மற்றும் ஓட்டுநருக்கான செலவை மாதந்தோறும் பாலா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சிமூலம் பிரபலமான பாலா மற்றும் அமுதவாணன் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு ஆங்காங்கே தேவைப்படும் பல நல உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்.சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னால் முடித்த உதவிகளைச் செய்தார்.
அந்த நிலையில் இன்று அனகாபுத்தூர் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில முதியோர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் முற்றிலும் இலவசமாக ஆட்டோ ஒன்றை பொதுமக்களுக்காக வழங்கினார்.
ஆட்டோவில் தனியாக ஓட்டுநர் ஒருவர் நியமிக்கப்பட்டு அதில் (9176878751)தொலைபேசி எண் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது அணகாபுத்தூர் பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அழைக்கும் பட்சத்தில் அவசர தேவைக்கு மருத்துவமனை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆட்டோவிற்கான செலவு மற்றும் ஓட்டுநருக்கான செலவை மாதந்தோறும் பாலா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பாலா பேசும்பொழுது இது அரசியலுக்காகவோ விளம்பரத்திற்காகவோ இல்லை மக்களுக்காகச் செய்கிறேன் அதுவே எனது வெற்றியாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
