
குளித்தலை அருகே குட்டப்பட்டியில் 6 ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குட்டப்பட்டியில் 6 ஊர் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து 11 ஆம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில், மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, குதிரைகளுக்காக புதிய குதிரை, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.
இதில் சென்னை, திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த எல்லை பந்தய போட்டியினையை காண பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று ரசித்தனர்.



