
பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசினர் பள்ளியில் யாழி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக மாபெரும் கிரிக்கெட் பேட்டி நடைபெற்றது.
சென்னை பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசு மேல்பள்ளியில் யாழி விளையாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு ஊர்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசை தூத்துக்குடி அணி வென்று கோப்பையும் 70 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக கோப்பையும் 50 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. இதில், வெற்றிப்பெற்றவர்களுக்கு 185 ஆவது வார்டு வட்டச் செயலாளர் திவாகர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் சுரேஷ், சதீஷ் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.




