அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி இஸ்ரேல் : டிரம்ப் பெருமிதம்.!

அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி இஸ்ரேல் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இஸ்ரேலை மக்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு சிறந்த கூட்டாளியாகத் தங்களை நிரூபித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

அவர்கள் தைரியமானவர்கள், துணிச்சலானவர்கள், விசுவாசமானவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்று புகழ்ந்து கூறினார். தொடர்ந்து மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களைப் போல், இல்லாமல், இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது.

மேலும், எப்படி வெற்றி பெறுவது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *