Today Gold Rate In Chennai: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Advertisements

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385-க்கு விற்பனையானது.

இன்றைய (ஜூலை31) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,080-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,420-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,875-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,000-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *