IPL 20 Match : சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி.!

Advertisements

ஐபிஎல் 20 ஓவர் கிரிகெட் தொடரின் 27 ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றுள்ளது.

ஐதரபாத்தில் 19 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிகெட் தொடரின் 27 ஆவது போட்டி நடைபெற்றது. போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

இதில், அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 59 ரன்களும் ஹென்றிச் கிளாசன் 59 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *