தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து.!

தமிழில் எடுக்கும் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்று  கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில்  காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பிரேக் பாஸ்ட்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இந்நிகழ்வில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து பேசும்போது, திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைதான் இந்த படம். இந்தக் கதை எனக்கு பிடித்தாலும், படத்தின் தலைப்பில் உடன்பாடு இல்லை.
நாம் வைக்கும் தமிழ் பெயர் ஒரு கோடி பேரால் உச்சரிக்கப்படும், எழுதப்படும், பகிரப்படும். தமிழில் எடுக்கும் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்” என்று கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *