ஏர் இந்தியா விமானத்தை தகர்க்க காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் விடுத்தது குறித்து கனடா விசாரணை.
கடந்த வாரம் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஆன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நவம்பர் 19 -ஆம் தேதிக்கு மேல் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யக் கூடாது. மீறி பயணம் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பகிங்கரமாக மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து கனடா பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மற்றும் மிரட்டல் குறித்து தீர விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கனடா போக்குவரத்துதுறை அமைச்சர் பாபுலோ ரோடுரிக்யூஸ் கூறும்போது, நாங்கள் ஒவ்வொரு மிரட்டல் குறித்த செய்தியாகட்டும், வீடியோவாகட்டும் எதுவாயினும் மிகவும் சீரியசாக எடுத்து தீர்வு காண முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது மிரட்டல் இல்லை யாரும் ஏர் இந்தியா விமானத்தில் செல்லுவதை தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் 770,000 சீக்கியர்கள் உள்ளனர். அதாவது கனடா மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் சீக்கியர்கள் என்று தெரிவித்துள்ளார்.
சீக்கியர் ஒரு சிலர் கொலையில் இந்தியாவை சம்மந்தப்படுத்தி குற்றம் சுமத்திய நிலையில் சமீப காலமாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே சில வேண்டத்தகாத வெறுப்புணர்வு நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.