அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் நிறைவில் 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றுள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழர் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப், போட்டியினை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், ஆயிரத்து 100 காளைகளும், 600 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் நிறைவில், கருப்பாயூரணி கார்த்தி 19 காளைகளை அடக்கி 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பரிசாகத் தட்டிச்சென்றார். இதேபோல், பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 16 காளைகளை அடக்கி இருசக்கர வாகனத்தைப் பரிசாக வென்றார்.

இதையடுத்து, சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *