மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் திட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தேன்.என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
உங்களைப் பார்க்கும்போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது.தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்கக்கூடாது என வந்தேன்.
மருத்துவர் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துள்ளேன்.மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர்.
சொன்னதைச் செய்வோம்- அதன் அடையாளமே மகளிர் உரிமைத்திட்டம்.சொன்னதைச் செய்ததால் உங்கள் முன் தைரியமாக நிற்கிறேன்.
மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது என தெரிவித்தார்.