
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


