
அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கீழடி மற்றும் பெருநை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் 3D மாதிரிகளை உருவாக்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் “நேரடி வரலாற்று அனுபவம் – கீழடி ஒலி வழிகாட்டி” என்ற சமூகப் பயனுள்ள கல்வி கருவியை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்கள் இந்துமதி, மனோன்மணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இந்த கருவியை மாணவிகள் லிதன்யா ஶ்ரீ மற்றும் திவ்யதர்ஷனா வடிவமைத்துள்ளனர்.
இதில், கீழடி மற்றும் பெருநை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள், மணிகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் 3D மாதிரிகளை உருவாக்கி, அவற்றில் டச் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாணவி திவ்யதர்ஷனா பேசியபோது, கண்பார்வையற்றோருக்கு உதவும் வகையில் இந்த கருவியை கண்டுபிடித்து உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த கருவியை கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியத்தில் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


