“ராக்கெட் வேகத்தில் குதிரை பேரம்” – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழக அரசு ராக்கெட் வேகத்தில் குதிரை பேரத்தை நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், அதிமுக சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு விலை போயுள்ளதாகக் குற்றச்சாட்டினார்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, பொதுமக்களின் பிரச்சினைகளுக்குக் குதிரை வேகத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு, தற்போது ராக்கெட் வேகத்தில் குதிரை பேரத்தை நடத்திக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
எனவே, இடைத்தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *