Jayam Ravi: சமீபகாலமாகவே நடிகர்களின் திருமண வாழ்வில் விவாகரத்து என்பது அதிகரித்துகொண்டே போகிறது. ஏற்கனவே, கமல்ஹாசன், பார்த்திபன் போன்ற சிலர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பார்த்திராத வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி 17 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிந்து போனார்கள்.
அதன்பின் இசையமைப்பாளர் ஜெயம் ரவி தனது மனைவியைப் பிரிந்தார். இப்போது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துத் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில், தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவியென எல்லோருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
எனவே, ஒருவரை ஒருவர் புரிந்து, பிடித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி பிரிகிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. ஜெயம் படம்மூலம் அறிமுகமான ரவி அதன்பின் பல படங்களிலும் நடித்துத் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் கூட்டத்தையும் பெற்றவர். சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி உள்ள ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி.
அதனால்தான் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்துப் படம் தயாரித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவின் படங்கள் அதிகம் ஓடுவதில்லை. அடங்க மறு மற்றும் கோமாளி படங்களுக்குப் பின் 3 வருடங்கள் கழித்தே பொன்னியின் செல்வன் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ள ஜெயம் ரவி இப்போது எங்கே இருக்கிறார் என்பது அவரின் குடும்பத்தினருக்கே தெரியவில்லை. திடீரென வருகிறாராம். 2 நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு போய்விடுகிறாராம். அதோடு, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
அவரின் நடிப்பில் உருவான பிரதர் மற்றும் ஜெனி போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான புரமோஷனில் ஜெயம் ரவி கலந்து கொள்ள வேண்டும். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள். இதிலிருந்து ஜெயம் ரவி மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.