ஓமன் வளைகுடா – சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்!

ஓமன் வளைகுடா பகுதியில் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில், ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதனால் ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *