Advertisements

காட்டுமன்னார்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை அமைச்சர் பன்னீர் செல்வம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் 3 கோடியே 95 இலட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தினை, வேளாண்மை நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் நிகழ்ச்சியில் பேசிய போது, தமிழ்கத்தில் இதுவரை பல்வேறு முதலமைச்சர்கள் ஆட்சிபுரிந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட நபர்களும் மேன்மையடையும் வகையில், நேரடியாக அவர்களின் வங்கிகணக்கில் பணம் செலுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கல்விக்குழு தலைவர்கள் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisements



