கபடி களத்தில் கண்ணகி நகர் வீராங்கனைகள் அதிரடி..!

சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில மகளிர் கபடி போட்டியில் வெற்றிப்பெற்ற கண்ணகி நகர் கபடி குழுவினருக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி ஆகியோர் வெற்றிக் கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான மாநில மகளிர் கபடி இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், கண்ணகி நகர் கார்த்திகாவின் அணி முதல் பரிசான 5 லட்சத்தையும், இரண்டாம் பரிசை எஸ்எம்விகேசி அணியினர் 3 லட்சத்த்தையும் பெற்றனர். வெற்றிக் கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி ஆகியோர் வழங்கினர். இந்த கபடி போட்டியை காண பொதுமக்கள், விளையாட்டு ரசிகர்கள், இளைஞர்கள் என 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *