மூச்சு திணறி, நெரிசலில் சிக்கி, கைக்குழந்தைகள் என்றும் பாராமல் மிதி பட்டு 41 உயிர்கள் காற்றில் கரைந்து போன அந்த வினாடிகள், வெறும் செய்திகளோடு கடந்துபோகக்கூடியவை அல்ல; ஒட்டுமொத்த மனிதநேயத்தின் நெஞ்சிலும் ஆறாத வடுவாக மாறிய கறுப்புப் பக்கங்கள்.
கண்ணீர் வற்றாத கண்கள், தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள், பிள்ளைகளைப் பறிகொடுத்து நிர்கதியாய் நிற்கும் பெற்றோர்கள் என வேதனையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குடும்பங்களின் துயரத்தையும் இந்த மறக்க முடியாத நிகழ்வின் ஓராண்டு நிறைவில், நினைவு தினத்தை பற்றி பார்ப்போம்.!
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடூர விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழக வரலாற்றையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நடந்தது என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டம் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது தலைவரை மிக அருகில் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் ஒரே நேரத்தில் முன்நோக்கி முண்டியடித்ததால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அங்கிருந்த மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை, உட்கார நாற்காலி கிடையாது. இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றால் உள்ளே வர முடியாதோ, விஜய்யை பார்க்க முடியாதோ என்றெல்லாம் ஏக்கம் இருந்தது. இதனால் அந்த மக்கள் வெளியே செல்லாமல் களைப்பு, மயக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் விஜய் 12 மணிக்கு வரவில்லை. 9 மணிக்குச் செல்ல வேண்டிய நாமக்கல்லுக்கே நீலாங்கரை வீட்டில் இருந்து 9 மணிக்குத்தான் கிளம்பினார்.
நாமக்கல்லுக்கு விஜய் வரும் போது மணி 2 இருக்கும். அங்கு பேச்சை முடித்துக் கொண்டு அவர் மதிய உணவுக்கு பிறகு கரூருக்கு பயணத்தை தொடர்ந்தார். அப்போது வழிநெடுகிலும் கூட்டம், இதில் விஜய் பிரச்சார வாகனத்தில் அடிபட்டு சில பைக்குகள் விழுந்தன. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.
இப்படி விஜய் அந்த கூட்டத்தில் நீந்தி வருவதற்கு இரவு 7 மணியாகிவிட்டது. இருளும் சூழ்ந்து கொண்டது. விஜய்யின் வாகனம் உள்ளே வந்த போது அங்கிருந்த மக்களுக்கு அத்தனை உற்சாகம். அப்போது விஜய் உள்ளேயே அமர்ந்து கொண்டு விளக்கை போட்டு போட்டு அணைத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. விஜய்யை பார்க்க முண்டியத்த கூட்டம் இதனால் விஜய்யை பார்க்க மேலும் ஆர்வம் தொற்றியது.
மக்கள் ஒரே நேரத்தில் முன்னால் முந்தி சென்றது. அப்போது அங்கு ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது விஜய் பேசத் தொடங்கினார். அவர் பேசிய சில நிமிடங்களில் கூட்டத்தில் ஒரு சிறுமியை காணவில்லை என ஆதவ் அர்ஜுனா வந்து சொல்கிறார். உடனே விஜய்யும் “சிறுமியை தேடி கண்டுபிடியுங்கள்” என அங்கிருந்த மக்களுக்கு மைக்கில் சொல்கிறார். இதனால் அச்சத்தில் அங்கிருந்த மக்கள் மேலும் முண்டியடித்து வெளியேற முயன்ற போது பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மின்வெட்டு அப்போது அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் விஜய்யிடம் தண்ணீர் கேட்டனர். உடனே விஜய் தண்ணீர் கேன்களை கொடுத்தார். இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் கூட்டம் சிதறுகிறது. உடனே விஜய்க்கு இது தெரிவிக்கப்பட்டு அவர் பேச்சை நிறுத்திக் கொண்டு “ஜெகதீஷ் ஆம்புலன்ஸ் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றார். அப்போது மின்தடையும் ஏற்பட்டதால் நெரிசல் அதிகரித்தது.
அவசரமாக கிளம்பிய விஜய் இதையடுத்து அந்த பிரச்சார வேனை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டு சென்றுவிடுகிறார்கள். பிறகு பார்த்தால் கூட்டத்தில் பலர் மிதிப்பட்டே இறந்திருக்கிறார்கள். இதையடுத்து உயிருக்கு போராடியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததுமே செந்தில் பாலாஜி ஸ்பாட்டுக்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். முதல்வராக இருந்த ஸ்டாலின் நள்ளிரவு கரூருக்கு பிளைட்டில் வந்தார்.
கரூர் சென்ற ஸ்டாலின் ஆனால் விஜய்யோ திருச்சியில் பிளைட் பிடித்துக் கொண்டு சென்னை சென்றார். மருத்துவமனையில் மரண ஓலங்கள், எங்கும் அழுகுரல்கள். குழந்தைகள் கீழே விழுந்ததில் அவர்களை மிதித்து குடலே வெளியே வந்ததாகவும் முகமே சிதைத்து போனதாகவும் உறவினர்கள் கம்ணீர் மல்க தெரிவித்தனர். குழந்தைகள் இந்த சம்பவத்தில் பலர் குழந்தைகளையும், கணவரையும் மனைவியையும், தாய், தந்தையரையும் இழந்து பரிதவித்தனர்.
இதையடுத்து 30 நாட்கள் கழித்து கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வாகனம் வைத்து மாமல்லபுரம் ரிசார்டுக்கு அழைத்து வந்து தனித்தனியே ஒவ்வொருக்கும் விஜய் ஆறுதலை தெரிவித்தார். இறந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அது போல் தவெக சார்பில் ரூ 20 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிள்ளைகளின் கல்விச் செலவுகக்கான உதவிகளையும் ஏற்க தயார் என தவெக அறிவித்திருந்தது.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் மீட்பு பணிகளை பார்வையிடாமல் சென்னைக்கு விஜய் வந்ததை பல அரசியல் தலைவர்கள் விமர்சித்தார்கள். தான் வராவிட்டாலும் கட்சி நிர்வாகிகளையும் விஜய் அனுப்பவில்லை என்ற பேச்சு எழுந்தது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகும் நிலையில், விஜய் துயர பதிவை போட்டுள்ளார்.இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் மூச்சுத்திணறியும், மிதிபட்டடும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய பெரும் சோகமாக மாறியது.விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவாககரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட நினைவுப் பலகை (ஃபிளக்ஸ் பேனர்) மற்றும் மெழுகுவத்திகள் வைக்கப்பட்டு சிறப்பு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் விபத்தில் தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவரும் நேரில் பங்கேற்றனர். உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏந்தி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி அங்கிருந்தோரை நெகிழச் செய்தது. இந்நிகழ்வில் தவெக-வின் முக்கியப் பொறுப்பாளர்களான: மதியழகன், M.R. விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து, பலியானவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

