Turkey : திடீரென புகை வெளியேறியதால் தரையிறங்கிய விமானம்.!

நடுவானில், விமானத்தில் திடீரென ஏற்பட்ட புகையினால் அவசரமாக தரையிறங்கியதால் 142 பேர் உயிர் தப்பினர்.

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில், இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில், இலண்டனுக்கு விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர். இந்நிலையில், நடுவானில் சென்ற போது, விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

இதில், 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

இதையடுத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *