
வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்காகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர் ராயனூரில் அதிமுக அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அலுவலகத்தின் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்குத் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டுமென்றுமூ கட்சியினருக்குக் கோரிக்கை விடுத்தார்.



