T. R. Paarivendhar: மீண்டும் மோடி பிரதமர் ஆவார்!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.

பாஜக கூட்டணியில் ஜனநாயக கட்சிக்குப்  மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளதாகக் அக்கட்சியின்  நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார்.

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்றுநாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில், கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்,  மாநில,  மண்டல,  மாவட்ட,  நகர,  ஒன்றிய,  பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து அணிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன.பின்னர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இயற்கை எய்தினார். அவருடைய இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொண்டார். இந்திய ஜனநாயக கட்சி பொதுக்குழு முடிந்த பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன் எனத் தெரிவித்தார்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.பாஜக கூட்டணியில் ஜனநாயக கட்சிக்குப் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர்.இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ஜனவரி அல்லதுபிப்ரவரிமாதத்தில்மாநிலமாநாடுநடத்தப்படஉள்ளது.மாநாடுதேதிபின்னர்அறிவிக்கப்படும்.மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகையிலும் உதவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்சி நிர்வாகிகள் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கிப் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார் சாலைகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்,

கச்சத்தீவை உடனடியாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டு  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்வது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முன்மாதிரி தொகுதியாகப் பெரம்பலூரை மாற்றிய பாரிவேந்தர் எம்.பிக்கு  நன்றி தெரிவித்துக் கொள்வது, காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் வராததால் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும்;2024 பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தர் மீண்டும் களமிறங்க வேண்டும். அவரது வெற்றிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *