
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்-1,011,மாணவ மாணவிகளுக்கு உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்- சுந்தர் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரசுப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்- சுந்தர்கலந்து கொண்டு, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்-1,011,மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்!!
உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்மாளம்பூண்டி, மானாம்பதி, பெருநகர், களியாம்பூண்டி, திருப்புலிவனம், உள்ளிட்ட உத்தரமேரூர் ஒன்றியங்களில் உள்ள
அரசு பள்ளிகளில் பயிலும் 1,011- மாணவ- மாணவிகளுக்குத் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை உத்தரமேரூர்எம்எல்ஏ-சுந்தர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, ஒன்றிய செயலாளர் கே.ஞானசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்- வெற்றிச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா, ஊராட்சி மன்ற தலைவர்கள், மங்கள கௌரிவடிவேலு, ராதா நடேசன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திரளானோர் பங்கேற்றனர்.



