முதலமைச்சருக்கும் இதன் பின்புலத்திலிருந்த அறிவுப்புலத்தார்க்கும் நன்றி – வைரமுத்து!

Advertisements

சென்னை:

தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் தொழில்நுட்பம் புழக்கத்தில் வந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்ததற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பது,

இரும்பின் தொழில்நுட்பம்

5300 ஆண்டுகட்கு முன்பே

தமிழ்மண்ணில்

புழக்கத்திற்கு வந்துவிட்டது

என்ற பிரகடனத்தை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளியிட்டபோது

அவர் குரலிலும் முகத்திலும்

தொனித்தது

ஒட்டுமொத்தத் தமிழினத்தின்

பெருமிதம் அல்லவா?

உலக ஆய்வகங்களின்

கதிரியக்கப்

பகுப்பாய்வுக்குப் பிறகு

இந்தத் தொன்மை

உண்மையென்று

உணர்த்தப்பெற்றுள்ளது

தீ இரும்பு சக்கரம் என்ற

கண்டுபிடிப்புகளே

மனிதகுல வரலாற்றை

வளைத்துத் திருப்பியவை

இதில் இரும்பின் இடம்

உறுதியானது

திருவள்ளுவர் இரும்பைப்

பொன் என்று சுட்டுகிறார்

“தூண்டில் பொன்

மீன்விழுங்கி யற்று” என்கிறார்

இந்தப் பெருமை

இந்திய நாகரிகத்துக்குத்

தமிழர் முன்னோடி என்பதை

உறுதிசெய்யும்

முதலமைச்சருக்கும்

இதன் பின்புலத்திலிருந்த

அறிவுப்புலத்தார்க்கும்

நல்வணக்கம் செலுத்தி

நன்றிசொல்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *