நீட் விவகாரத்தில் நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயார் – ஜே.பி. நட்டா!

நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அரசுகள் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மாணவர்களின் நலனோ அல்லது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோ உங்கள் நோக்கம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும், இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கிறீர்கள் எனவும் குற்றம்சாட்டினார்.
இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், அது குறுகிய நேர விவாதமாக இருந்தாலும் சரி, நீண்ட நேர விவாதமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர விவாதம் என்பதை எதிர்க்கட்சியே தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், சிஜேபி கட்சியினர் விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்களிடம் தான் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *