ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தாக்குதல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இனிவரும் காலங்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட் அல்லது டிரோன் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ஈரானின் ஒரு பாலம் அல்லது ஒரு மின் நிலையத்தை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அந்த ரகசிய அணு உலை மையம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.



