Ratan Tata Birth Day: 86-வது பிறந்த நாள் காணும் மாமனிதர் ரத்தன் டாடா!

Advertisements

உலகளவில் மதிக்கப்படும் மிகப்பெரிய மாமனிதாரான ரத்தன் டாடாவிற்கு இன்று 86 ஆவது பிறந்த நாள். தொழில் தொடங்கி அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் அவரது நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகும்.

இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் அதிபரும், அதிக நன்கொடைகளை வழங்குபவருமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் ரத்தன் டாடா அவர்கள் டிசம்பர் 28- ல் இன்று 86 வயதை எட்டுகிறார். அவரை தற்போது வரை 118 லட்சம் டிவிட்டரில் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

அதோடு, இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிகவும் மதிக்கப்படும் பிசினஸ்மேன்கள் ஒருவராக உள்ளார்.
இதற்கிடையில், IIFL Wealth Hurun இன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022 இன் படி, சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரும் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா ஆவார். மேலும் அவரது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 18 லட்சம் அதிகரித்துள்ளது.

ரத்தன் டாடா சிறந்த தொழிலதிபர் ஆவார்.  தொழிலில் நேர்மையும் விடாமுயற்சியும் கண்ணையத்தையும் கடைபிடிப்பவர். ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி நிகர மதிப்பில் பெரும்பகுதி டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வருகிறது. IIFL Wealth Hurun India Rich List 2022 இன் படி அவர் 421 வது பணக்கார இந்தியர் ஆவார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 433 வது இடத்தில் மொத்த மதிப்பு 3,500 கோடி ரூபாயாக இருந்தது. டாடா சன்ஸ் என்ற ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் உள்ள டாடா நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களுக்காக ஈட்டிய வருவாய்களில் இவர் டாடா டிரஸ்ட்கள் மூலம் 66 சதவீதம் பங்களிப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *