
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம் ஆர் ஐ ஸ்கேன் எனப்படும் பரிசோதனை மையம் இதுவரை அமைக்கப்படாததால் பொதுமக்கள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் ஸ்கேன் மையத்தில் அரசு மருத்துவர்களின் படிவத்துடன் இலவசமாக எடுத்துவந்தனர்.

இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக இந்த வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் எடுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன்ளுக்கு தமிழக அரசு உரிய தொகை வழங்குவதில்லை எனக்கூறி தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுப்பதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது .
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துவந்தனர்.இந்தநிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கோரிக்கை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் உடனடியாக நிறுவ கோரி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.


